Sunday, October 12, 2025

Bg 6.16_17

 



நாத்யச்னதஸ்து யோகோsஸ்தி ந சைகாந்தமனச்னத: 1 யுக்தாஹார விஹாரஸ்ய யுக்த சேஷ்டஸ்ய கர்மஸு | 16

ந சாதி ஸ்வப்ன சீலஸ்ய ஜாக்ரதோ நைவ சார்ஜூன யுக்த ஸ்வப்னாவபோதஸ்ய யோகோ பவதி து:க்கஹா N 17


அர்ஜுனா! அதிகமாய் உண்பவனுக்கு யோகம் இல்லை; ஒன்றும் உண்ணாதவனுக்கும் இல்லை; மேலும் தூக்கத்தில் அதிக விருப்பம் உடையவனுக்கும் இல்லை; தூங்காமலே விழிப்பவனுக்கும் இல்லை.


மிதமான ஊணும் உலாவுதலும் உடையவ னுக்கும், கர்மங்களில் மிதமாக உழைப்பு உடையவ னுக்கும், மிதமான உறக்கமும் விழிப்பும் உடையவ னுக்கும் யோகமானது துன்பம் துடைப்பதாக ஆகிறது.


எப்போது நன்கு அடங்கிய சித்தமானது  ஆத்மாவிலேயே ஊன்றி நிற்கிறதோ அப்போது எல்லா ஆசைகளினின்றும் பற்று நீங்கிய அவன் யுக்தன் என்று சொல்லப்படுகிறான்.


எவ்வாறு காற்றில்லாத இடத்தில் வைக்கப் பட்ட விளக்குச்சுடர் அசைவதில்லையோ, அது ஆத்மாவினிடத்தில் யோகத்தை அப்பியசிக்கும் யோகியின் அடங்கிய சித்தத்துக்கு உவமையாக அறிஞர்களால்

சிந்திக்கப்பட்டுள்ளது.